வியாழன், 27 ஆகஸ்ட், 2020

இரயிலும், மசால் பொரியும்

 சுவையான அனுபவம்


ஒரு இரயில் பயணத்தின் பொழுது எனது கோச்சில் மசாலா பொறி கொண்டு வந்தார் வணிகர், 

முதலில் அனைவருமே மன்மோகன்சிங் நிலையில் தான் இருந்தோம், 

நாம் சும்மா இருந்தால் தான் நம் வாய் சும்மாக இருக்காதே ! 

அண்ணா பொறி என்றேன், 

அவரும் சிக்கிட்டான் டா ஒருத்தன் என்ற ரீதியில் எடுத்து கொடுத்தார்.


சில நொடிகளில் நம் வலது கை, இடது கை,எதிரில் இருந்தவர் என 6 கைகள் நீட்டியது..

மைண்ட் வாய்ஸ் : ஏன் பா நீங்களா வாங்க மாட்டிங்க, எவராவது ஒருவர் வாங்கியவுடன் தானும் வாங்கி கொள்வது..

என்ன ஒரு புத்திசாலி தனம் 😲


நீங்களும் ஒரு முறை இது போன்று முயற்சி செய்து பாருங்களேன் 👍🏻

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

சல்லிகளும் சல்லாபங்களும்..

 

சல்லிகளும் சல்லாபங்களும்..


சாமியார்கள் என்று சொன்னால் 

Anti-Indian என்று ஆக்கிவிடுவார்கள் சில ஆர்வ கோளாறுகள். உங்களை பக்தாஸ் என்று சொல்லி அந்த வார்த்தையை சாமியார்கள் பெண்மையை கலங்கபடுத்துவது போல் கலங்க வைக்க விரும்பவில்லை.


இந்து மதத்தில் மட்டும் தான் இது போன்று நடக்கிறதா ? மற்ற பாதிரியார்களும்,மத குருமார்களும் பரிசுத்தமானவர்களா ? 

பெண்ணின் அனுமதியின்றி அவளை தொட நினைக்கும் எந்த ஆடவனும் அவள் கணவன் உட்பட எவனும் தண்டனைக்கு உட்பட்டவர்களே.


80% இந்துக்கள் மக்கள் வாழும் நாட்டில் அந்த சமயத்தை சேர்ந்தவர்கள் எதாவது நல்லது செய்தாலும் தவறுகள் செய்தாலும் அது பெரியதாக காட்டப்படுவதும்,விமர்சிக்கபடுவதும் இயல்பே..


15 வயது பெண்ணை (2002 இல்) கற்பழித்தற்காக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கபட்டு தண்டனைக்காக காத்திருக்கிறார் ஹரியானாவை சேர்ந்த ராம்-ரஹீம் என்ற சாமியா(ரோ)??


குற்றம் நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது அதுவும் CBI சிறப்பு (special )நீதிமன்றம் இன்னும் உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்றால் அந்த பெண்ணின் பேரன் தீர்ப்புக்காக காத்திருக்காமல் வெட்கி தலை குணிந்து நிற்பான். இதிலிருந்தே தெரிகிறது நம் நீதிதுறையின் கட்டமைப்பு..


இதற்கு விடிவுகாலம் எப்பொழுது ? யார் தருவார் அதை ?  

இரண்டாம் கேள்விக்கு விடை உள்ளது. 

நீ தான் அதற்கு விடிவு தர வேண்டும். எப்படி ? 

நம்மை விட இவர் உயர்ந்தவர் என்று உன்னை அடிமையாக நினைக்காதே, இவர் நம்மை விட தாழ்ந்தவர் என்று அவரை அடிமையாக்க நினைக்காதே.


இதற்கு படிப்பு மட்டும் போதாது நற்பண்பும் , பகுத்தறிவும் இன்றியமையாதது. நமக்கு எழும் பிரச்சனையை முடிந்தளவு நாமே முயன்ற அளவுக்கு முயற்சி செய்து முடிவுக்கு கொண்டு வருவது சால சிறந்தது இல்லையா முன்னோர்களிடமும், நட்புகளிடமும் கலந்துரையாடினால் கண்டிப்பாக விடை கிடைக்கிறதோ இல்லையோ மனம் ஒரு தெளிவு கிடைக்கும்.


அதை விடுத்து இந்த மாதிரி சல்லிகளிடம் சாமியா(ரோ) ரிடம் சிக்கினால் உன் வாழ்க்கை சின்ன பின்னமாவதோடு உன் சுற்றுவட்டமும் கலங்கப்படும்.  


சிந்திப்போம்.....

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

எனக்கு பிடித்த பாடல்

 எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.

முதல்வன் திரைப்படத்தில் வரும்

 " குருக்கு சிறுத்தவளே " பாடல். இன்று வரை அடிக்கடி முனுமுனுக்கும் பாடலும் கூட.


பஞ்ச பூதங்களில் (நீர்,நிலம்,காற்று, நெருப்பு, ஆகாயம்) நடப்பது போல் இப்பாடல் படமாக்க பட்டிருக்கும்.

கேமரா மேன் மற்றும் இயக்குனர்  ஷங்கர் ரொம்பவே மெனக்கிட்டுருப்பார்கள். 


மனசு கொஞ்சம் கனமாக இருக்கையில் இந்த பாடலை 

கேட்கையில் ரொம்ப லேசாகி விடும். அப்படி ஒரு அருமையான மெலடி பாடல். 


இப்பாடல் புல்லாங்குழலின் மெல்லிய இசையுடன் தொடங்கும். 


இப்பாடல் உருவாக காரணமானவர்கள் தாய், தந்தை(இசை, வரிகள்)யாக    ரஹமான்,வைரமுத்துவும்.  


பாடல் வரிகள் கிராமத்து பெண்ணை மனதில் வைத்து எழுதியிருப்பார் வைரமுத்து.

 (பெண்: கம்பசங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நுழைஞ்சு உறுத்திரியே, 

ஆண்: மஞ்சள் தேச்சு குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே, 

உம்போல சிவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல ) 


ரகுமான் இசை அப்படியே நம்மை மெய்மறக்க செய்யும் குறிப்பாக புல்லாங்குழல் தனித்துவமாக தெரியும். இசை வாத்தியங்கள் நம்மை தாலாட்டு  modeக்கு கொண்டு செல்லும்.


இப்பாடலுக்கு தன் குரலால் உயிர் கொடுத்திருப்பார் 

பாடகர் ஹரிஹரன். (குறிப்பாக குங்குமத்தில் கரைச்சவளே என்பதில் ஒரு அழத்தம் கொடுப்பார் ) மனுஷன் ரசிச்சு பாடியிருப்பார். இன்று வரை முதல் முறை கேட்பது போல ஒரு உணர்வுக்கு அக்குரல் முக்கிய காரணம்..


இப்பாடல் ஒரு குழந்தையை போன்றது எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம்.


இவன்

ராஜா.க

புதன், 19 ஆகஸ்ட், 2020

ஏழைத்தாயின் மகள்

 கேன்சரால் பாதிக்க பட்ட அம்மாவை காப்பாற்றும் “ஏழைத்தாயின் மகள்” நயன் தாரா. 


தன் அன்னையை எப்படி காப்பாற்றினார் என்பதை அழகாகவும்,அழுத்தமாகவும்,

சொல்லி கேன்சரோடு, நம்மையும் வென்று விட்டார் இயக்குனர் நெல்சன்..


வடிவேலு இல்லாமல் தவித்த 

தமிழ் சினிமாவை யோகி பாபு தன் வசபடுத்தியுள்ளார்,மனிதன் அறிமுக காட்சியில் தியேட்டரில் பலத்த விசில் சத்தம். 


அனைத்து கதாபாத்திரங்களும் சிரிப்பை வரவைக்கிறது குறிப்பாக டோனி நடிப்பு குபிர் ரகம்.    


பந்தா இல்லாமல் பாவாடை சட்டையில் பாந்தமாக நடித்து கொள்ளை கொள்கிறார் நயன் 

 என்ற  #KolamaavuKokila

புதன், 12 ஆகஸ்ட், 2020

ப்யார்,ப்ரேமா,காதலுடன்

 படத்தின் தலைப்பே எதை பற்றி என்று  இருப்பதால் அது தான் கதையே..


தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அடித்து,துவைத்த சப்ஜெட் காதல். இன்றளவும் திரைப்படமாக வருவகிறதென்றால் அதில் மாற்றம் என்றதொரு காரணி இருப்பதால் தான்..


கால மாற்றதிற்கு ஏற்ப மாறபடுவதில் “காதல்” ஒன்றும் விதிவிலக்கல்ல; 


மிடில் க்ளாஸ் குடும்பம் அம்மா,அப்பா வளர்ப்பில் அன்பான பையன் கதையின் நாயகன், 

ஹைக்ளாஸ் குடும்பம் அப்பா வளர்ப்பில் மகள் இவர்களுக்கிடையே காதல்.. கைகூடியதா ? 


Live In relationship மையமாக வைத்து  வந்திருக்கும் மற்றொரு தமிழ்படம். வழக்காமன தமிழ் சினிமாவில் கதாநாயகி செய்வதை இதில் கதாநாயகன் கன கச்சிதமாக செய்கிறான் (அழுவது ) முதற் 

கொண்டு.


அவன் மேல் பரிதாபம் வருகிறது ஆனால் அவன் கேள்விகளுக்கு 

கதாநாயகி அளிக்கும் பதில் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர முற்படுகிறார் இயக்குனர். இறுதியில் சுபமாக முடிகிறது.


ரைசா பின்னி பெடல் எடுக்கிறார். ஹரிஸ் நடிப்பு செம,நம்மில் ஒருவனாகவே இருக்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் இசையில் கேட்கும் படி பாடல் ஆனால் எதற்கு இத்தனை பாடல்கள் ? 


எனக்கு கலாச்சாரம்  தான் முக்கியம் ஆண் என்றால் இப்படி பெண் தான் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறுபவர்களா ? தயவு 

செய்து விலகி கொள்ளுங்கள் உங்களுக்கான படம் இல்லை இது.


இந்த கலாச்சாரம், கசமுசா எல்லாம் 5 வருட ஆட்சி மாற்றம் போல் மாறி கொண்டே இருக்கும், என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம்.


அந்த காலத்தில் இயக்குனர் பாலசந்தர் தன் திரைப்படங்களில் கடினமான கதை களத்தை தன் திரைக்கதையால் இலகுவாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்;அப்பொழுதும் கலாச்சார பேர்வழிகள் அவரை தூற்றுவார்களாம்;


இயக்குனர் இளன் தான் நினைத்ததில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சி படுத்தி இருக்கிறார் இறுதி காட்சி வரை.


ப்யார்,ப்ரேமா,காதலுடன்

ராஜா.க