திங்கள், 14 ஜனவரி, 2019

பேட்ட என் பார்வையில்

ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நிகராக வில்லன் கதாபாத்திரம் படைக்க பட்டிருந்தால் அத்திரைப்படம் விறுவிறுப்பாகவும்,சுவாரசியமாகவும்
இருக்கும்

அந்த சூட்சமத்தை அறிந்த நடிகர் ரஜினி அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார். அவரின் சூப்பர்,டூப்பர் ஹிட் படங்களை பார்த்தாலே அது தெரியும்.

மாப்பிள்ளையில் தொடங்கி மன்னன்,அண்ணாமலை,பாட்ஷா,
படையப்பா,சந்திரமுகி,சிவாஜி என நீளும் இந்த பட்டியல்.

எஜமான்,வீரா,அருணாச்சலம்,
உழைப்பாளி இதில் வில்லன்களுக்கு பெரிய அளவில் வேலை இருக்காது இவையெல்லாம் சுமார் ரகம் தான்

ரஜினி ரசிகராக சிறு சிறு விஷயங்களை பார்த்து பார்த்து reference ( ,பாம்பு பாம்பு,)
அழகாக வைத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் தடுமாறிவிட்டார். ஜித்து கதாபாத்திரத்திற்கும்,சிங்காரம் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவமே கொடுக்கவில்லை. இவர்களை பார்த்து பயம் வரவில்லை மாறாக பரிதாபமே வருகிறது

படத்தின் பலம் அனிருத்தின் பின்னனி இசை பின்னி பெடல் எடுத்துள்ளார்
த்ரிஷா,சிம்ரன்,விஜய் சேதுபதி போன்றோர் தங்கள் கலைபயணத்தில் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.  


 படத்தின் கதையில் (பாட்ஷா,கிரி,ஊர்காவலன்) சாயல்கள் தெரிந்தாலும் தன் திரைக்கதையால் (உத்திரபிரதேசம்,காதலர் தின வன்முறை,பசு மாடு,காவி கொடி) உதவியுடன் ஒட்டு போட முயல்கிறார் இயக்குனர். மிசா நடந்தது 1977 அப்பொழுது செல்போனெல்லாம் இந்தியாவில் வந்ததா?சரி ரஜினிக்காக மன்னிப்போம் மறப்போம்.  



பலமில்லாத வில்லன்,இரண்டாம் பாதியின் நீளத்திற்கு கத்திரி போட்டிருந்தால் ரஜினிக்கு இன்னொரு மணி மகுடமாக சூட்டபடவேண்டிய இந்த  பேட்ட முந்தைய மகுடத்தின் மயில் இறகாக மட்டுமே அலங்கரித்துள்ளது #பேட்ட