வியாழன், 11 ஜனவரி, 2018

ரஜினியும், பொங்கலும்

என் சிறு வயதில் தீபாவளி என்றவுடன் சட்டென்று நம் மனதில் மத்தாப்பாய் மலர்வது பட்டாசு தான். இன்றைய நாள் வரை இதன் மேல் உள்ள ஈர்ப்பு சிறிது குறைந்திருக்குமே தவிர முழுவதுமாக இல்லை

அது போல் பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது பல வண்ணங்கள் கொண்ட  
பொங்கல் வாழ்த்து அட்டைகள்பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன் இதன் சீசன் தொடங்கி விடும்.  

எங்கள் ஊரில் உள்ள 
அன்பு ஸ்டோர்,வள்ளுவன் ஸ்டோர்,லதா ஸ்டோர் கடைகள் இதற்கு பெயர் பெற்றது. கடைக்கு வெளியே பெரிய பலகைகள் அமைத்து அதில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளை பரப்பியிருப்பார்கள்

MGR தொடங்கி ரஜினி, கமல், என அனைத்து நட்சந்திரங்களும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள்.
50 பைசா முதல் ஐந்து ரூபாய் வரை வித வித மான அட்டைகள்

சிறு வயதில் அனைவர் போல ரஜினி வெறியன் நான் . எனக்கு பிடித்த ரஜினி அட்டைகள் தான் பெரும்பாலும்
நான் என் நண்பர்களுக்கு கொடுப்பது. பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகள் நடிப்பை அப்பொழுதே தொடங்கி ஆயிற்று

நமக்கு மிகவும் பிடித்த,எதிர்பார்த்த நபர்களிடமிருந்து வரும் அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை increment கடிதத்தாலும் தர இயலாது.
நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் வந்துள்ளது என்ற சிறு போட்டியும் இருக்கும்.

அன்று மனமும்,நேரமும் நிறையவே இருந்தது பணம் கம்மியாக இருந்தது. இன்று பணம் இருக்கிறது மனமும்,நேரமும் இல்லை
சுஜாதா கூறியதை போல் வாழ்க்கையிலும் TV remote  இல் உள்ளது போல் rewind பட்டன் இருந்தால் எவ்வளவு அழகாக இனிக்கும்

நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துகள்

இனிப்புடன் 

ராஜா. 

செவ்வாய், 2 ஜனவரி, 2018

வசூல் ராஜா !!!

2017 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் குறைந்த பட்ச வைப்பு தொகை இல்லாத காரணத்திற்காக SBI வாடிக்கையாளர்களிடத்திலிருந்து வசூலித்த தொகை ₹1771 கோடி. 

இது போன்று வங்கியில் கடன் வாங்கி கம்பி நீட்டிய மல்லாயக்களிடம், அம்பானியிடமும் வசூலித்தால் “அட “
இது தாண்டா “வசூல் ராஜா” எனலாம்.
நீங்களிடம் வசூலிப்பது அப்பாவி ராஜா,டேவிட் ,ஹஜாக்களிடம்.

இது தவிர பணம் Deposit செய்தால் ஓரு தொகை,SMS சேவைக்கு ஓரு தொகை,Annual maintenance இது எல்லாம் சில வாடிக்கையாளர்களுக்கு தெரிந்த நடப்பது பல நபர்களுக்கு தெரியாமலே நடக்கிறது.

சரி இந்த பணத்தையெல்லாம் என்ன செய்வீர்கள் என்றால் மல்ல்லய்யாக்களுக்கும்,அம்பானிக்கும் கடனாக கொடுப்பிர்கள் சில நாள் கழித்து வராக்கடன் list சேர்த்து கொள்வீர்கள். 

எங்கள் ஊரில் ஓரு சொலவடை உண்டு.
“நல்ல வாயான் சம்பாதித்தை நாற வாயன் எடுத்துட்டு போவான்” நினைவுக்கு வருகிறது.

இது போன்ற ஏமாற்று செயல்கள் சமானியனின் மனதில் விதைப்பது அரசே என்னை ஏமாற்றுகிறது நான் ஏன் அரசை ஏமாற்ற கூடாது ?? என்ற விதையை இதுவே செடியாகி,மரமாகி வளரவிடாமல் தடுப்பதே ஜன நாயக்த்தின் அழகு.

மினிமம் அறம் விரும்பும்

ராஜா.க