திங்கள், 23 அக்டோபர், 2017

நானும் மதவாதியே !!!


 தீபாவளிக்கு வெடி வெடித்த மாணவர்களை ஏசுவிடம் மன்னிப்பு கேட்க சொன்ன திருச்சி சர்வைட் பள்ளி தலைமையாசிரியை லில்லி !!!

இதுக்கெல்லாம் மதசார்பற்றவர்கள் என்று கூறும் போலிகள் மன்மோகன் mode க்கு சென்று விடுவார்கள்..

இதை அப்படி உல்டா செய்வோம் ராமனிடம் மன்னிப்பு கேட்க வைத்திருந்தால் sleeper cell போல் எங்கிருந்து வருகிறார்கள என்றே தெரியாது .. நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை, காவி ஆட்டியில் இது சகஜம் , என்று தீவரவாதிகளை போல் வார்த்தை குண்டுகளால் மற்ற மத நம்பிக்கைகளை தகர்ப்பார்கள் .

தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடே கிடையாது..

நண்பர்களுடன் கலந்துரையாடலில் நான் சொல்லுவது  BJP என்ற கட்சிதான் என் மதம் சார்ந்த நம்பிக்கைக்கு துனை நிற்பது என்று.அதற்காக BJP என்ன செய்தாலும் முட்டாள் போன்று முட்டுகொடுப்பவனில்லை.

மற்ற மதத்துக்கு என்றால் அந்த மதத்தின் மீது பற்று இல்லாமல் வெறும் ஒட்டு வங்கி அரசியலுக்காக சில கட்சிகள் துனை நிற்கும்.
இந்து மதம் என்றால் அதே கட்சிகளுக்கு கசக்கும். BJP என்ன வென்றாவது கேட்கும்
இதனால் என்னை மதவாதி என்று கூறினால் பெருமையாக ஏற்று கொள்கிறேன்.

திங்கள், 16 அக்டோபர், 2017

மெர்சல் ஆன தமிழக அரசியல்



மெர்சல் ஆன தமிழக அரசியல்  

தமிழக அரசியலுக்கும், திரைதுறைக்கும் நெருங்கிய நெருங்கிய தொடர்புண்டு. திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவபவர்களை திருமண வாழ்க்கையோடு ஒப்பிட்டு மூன்று வகையாக பிரிக்கலாம்

  1. திருமணம் செய்து கொண்டு  மனைவியின் மனதை நன்கறிந்து சிறப்பான வெற்றி பெற்று சரித்தரத்தில் இடம் பெற்றவர்கள்.
  2. எவ்வளவு மன கசப்பு இருந்தாலும் வெளி காட்டி கொள்ளாமல் இந்த படகிலேயே பயணம் செய்பவர்கள்
  3. மண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு, தோல்வியுற்று அதிலிருந்து விலகியிருபவர்கள்.   

மேல் சொன்ன மூன்றையும் அரசியலுடன் ஓப்பிட்டு பாருங்கள் இரண்டாம்,மூன்றாம் ரக மக்கள்  தான் மிக அதிகம்

முதல் ரகத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் மனைவி க்கு பதில் மக்களின் மனதை நன்கு அறிந்தவர்களே அரசியலில் வெற்றி கொடி கட்டி  வீட்டோடு,நாட்டையும் சேர்த்து ஆண்டார்கள்

திரு. MGR திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். நாம் நினைப்பது போல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அரசியலுக்கு வந்து உடனே முதல்வர் ஆகவில்லை

ஒரு கட்சியில் சேர்ந்து நடிப்புடன், அரசியலையும், அரசியல்வாதிகளையும் ஒரளவு  தெரிந்து கொண்டவர்
தன் திரைப்படம் ஒடும் திரையரங்கிற்கு சென்று தான் நினைத்த காட்சியில் மக்களின் மனது எப்படி இருக்கிறது என்று மக்கள் பல்ஸ் பார்த்தவர்
MGR இன் field work இது ஒரு சான்று

மேலும் தனகென்று ஒரு விசுவாசமான கூட்டத்தையும் சேர்ந்திருந்தார் இன்றைய நாளில் விசுவாசத்திற்கு பல பேருக்கு அர்த்தம் என்ன என்று கூட தெரியாது.

MGR தனி கட்சி தொடங்கிய பின் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட( .சு.வாலிபன்) திரைக்கு வருவதில் ஏற்பட்ட சிக்கலை அவர் கையாண்ட விதமும் அதில் பெற்ற வெற்றியும் தான் அவரை அரசியலிலும் வெற்றி நாயகனாக்கியது

MGR க்கு இந்த வெற்றி எளிதில் கிடைக்க வில்லை கள அரசியல் கண்டு, மக்கள் மனம் படித்து கிடைத்த வெற்றி.  

அதே யுக்தியை கையாண்டாலும் இன்று வெற்றி கிடைப்பது கடினம் ஆனால் அதையே இங்குள்ளவர்கள் எடுக்க துணிவில்லாதபோது
திரையில் மட்டும் அரசியல் பன்ச் (Punch)வசனங்கள் பேசுவது,அரசியல் வாதிகளுக்கு எதிராக குரல் 
கொடுப்பது (திரையில்) , வருவேன் , வரமாட்டேன் என ரசிகனை ஏமாற்றினால் அதற்கான எதிர் வினையை கையாள தான் வேண்டும்

திரைத்துறையில் உள்ள அனைத்து நடிகர்களும் இது போன்ற (படம் திரைக்கு வராமல்) பிரச்சனையை எதிர் கொள்ள வில்லையே ஏன் ? அவர்கள் தங்கள் படத்தில் அரசையோ , அரசியல்வாதிகளையோ குறை சொல்லவில்லையா ? சொல்கிறார்கள் ஆனால் திரையோடு நிறுத்தி கொள்கிறார்கள்

அதையும் தாண்டி சில நடிகர்களின் நடவடிக்கைகள் அரசியல் (பதவி) ருசியை உணர முயற்சிக்கும் போது தான் ஆளும் தரப்பு நடிகனை சீண்டி பார்க்கிறது அதை துணிந்து எதிர் கொண்டு வெற்றியாளனாக தமிழக அரசியல் வரலாற்றில் இடம் பெற்றவர்களும் உள்ளனர் தோல்வியை பதிவு செய்தவர்களும் உள்ளனர்.

இவண்

Raja K.S

வியாழன், 5 அக்டோபர், 2017

திமுக செல்லும் பாதை சரியா ?

திமுக செல்லும் பாதை சரியா ?

தமிழகத்தில் தற்பொழுதுள்ள
சூழ்நிலையையும் தமிழக எதிர் கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களின்  செயல்பாடுகளை விமர்சிக்கும்
 “தீடீர்அரசியல் விமர்சர்கர்களின் கருத்துக்கள்.

  1. இந்த ஆட்சியை கலைக்க முடியவில்லை என்ன செயல் தலைவர் ?
  2. ஏதாவது செய்து ஆட்சியை கலைக்க வேண்டியது தானே ?
  3. முதலமைச்சர் பதவி கானல் நீர் தான் !!! 

திரு.ஸ்டாலின் அவர்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்றால் 2006-2011 தி.மு கழக ஆட்சியின் போதே அப்பதவியில் அமர்ந்திருக்கலாம். மாறாக தலைமை கொடுத்த துணைமுதல்வர் பதவியை ஏற்று கொண்டார்

2011 தேர்தலில் அடைந்த தோல்வியை 
ஏற்று கொண்டு கட்சியை பலப்படுத்தி 2016 இல் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 89 உறுப்பினர்களை கொண்ட பலமான எதிர்கட்சியாக அமர வைத்ததில் திரு.ஸ்டாலின் பங்கு அளப்பறியது

உட்கட்சி பிரிப்பு,சின்னம் முடக்கம் என்றில்லாமல் 60 வருட பராம்பரிய கட்சியை ஜனநாயக முறையில் 
வீறுகொண்டு நடந்து வருவதில் திரு.ஸ்டாலினுக்கும் பங்குண்டு

அதிருப்தி 
MLA க்களை வைத்து .பிரதேசம்,கோவா வில் பிஜேபி 
ஆட்சி கட்டிலில் அமர்ந்தது போல் அல்லாமல் 
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க பட்ட ஆட்சியை ஜனநாயக முறையில் அகற்றுவது தான் முறை 
எதிர்கட்சி தலைவராக தன் பணியை செய்கிறார்.

தற்பொழுது இந்தியாவில் பிற மாநில கட்சிகள் தேய்கையில் திமுக எனும் கட்சியை சரியான பாதையில் சாரதியாக பயணிக்க வைக்கிறார் திரு.ஸ்டாலின்