சனி, 4 பிப்ரவரி, 2017

போகன் என் பார்வையில்

சித்து விளையாட்டுக்களை
கலியுகத்திற்கு ஏற்றவாறு
உபயோகபடுத்தி சேட்டை செய்யும் சுகசுவாசியின் கதை.
அரவிந்த் சாமியின் அறிமுக காட்சியில்  ஆர்பார்க்கிறது இளைஞர்களின் பட்டாளம்.
ஆடல்,அடி தடி என்று வழக்கம் போல  மாமூல் (காவல்) நாயகனாக அறிமுகமாகிறார் "ஜெயம்" ரவி.
மப்பும்,உளரலுமாக நாயகி அறிமுகம் கலாசாரத்தீன் சீர்கேடு.
ரவி,ஹன்சிகா அறிமுகம்
ரசிக்கும் படியாகவும் அந்த பெண் பார்க்கும் காட்சி கல கல.
வங்கி கொள்ளை குற்றசாட்டில் கைதாகிறார் நரேன்.
தந்தையை காப்பாற்றும் தனையனாக அவதாறும் எடுக்கும் நாயகன் பிறகு நடக்கும் விறு விறு திரைக்கதை
முதல் பாதியை நகர்த்துகிறது.
இரண்டாம் பாதி ஆள் மாறாட்டம் அடி,தடி,பாடல் என்று
வழ வழ பாணியில் பயணித்தாலும் நாயகர்கள் அமர செய்கிறார்கள் இறுதி வரையில்.
தன் வசிய குரலாலும்,உடல் மொழியாலும் முதல் பாதியில் வில்லனாக இரண்டாம் பாதியில் ஹீரோ யிஸ செயல்களாலும் படம் முழுக்க தன் கொடி பறக்க விடுகிறார் அரவிந்த் சாமி.
நெகட்டிவ் கதாபாத்திரத்தில் உடல் அசைவுகளில் சிறுது தடுமாறுகிறார் ஜெயம் ரவி.
பெண்களை வெறும் கவர்ச்சியாக காட்டுவது சினிமாவின் சாபக்கேடு. இமானின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் படியும் பிண்ணணி இசை இம்சிக்கிறது.
இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளுக்கும்,வசனங்களுக்கும்  கத்திரி போட்டிருந்தால்  குடும்பத்துடன் ரசித்திருக்கலாம்.
இரண்டாவது முறையும் "தனி ஒருவன்" கூட்டணி  வென்றுள்ளது.